Powered By Blogger

Saturday 11 August 2012

மீண்டும் எழுவோமென!

இரண்டு வரி வள்ளுவத்தை
இருபது நூற்றாண்டு படிச்சீங்க
மற்ற மற்ற இலக்கியங்களும்
புரட்டி புரட்டி படிச்சீங்க

காந்தியின் சத்திய சோதனை
புத்தரின் தன்னிலை போதனை
இருள் கிழித்த கதிரினைப்போல்
கருத்தினிலே நிறைச்சீங்க

ஓடி ஓடி உழைச்சீங்க
தமிழ் தலைவனை மறந்தீங்க
தமிழர் ஆட்சியினை நீங்க
அந்நியனுக்கு கொடுத்தீங்க

உன் தேசத்திலே ஆறுண்டு
ஓட்டமில்லா வரண்டு கிடக்கு
அதை தட்டி கேக்க தலைனில்லை
கேட்க எவனுக்கும் தைரியமில்லை

வில்லுடைச்ச காலம் போச்சி
மீண்டும் கல்லுடைக்க போயாச்சி
வில்லத்தனம் எல்லாம் கூடிப் போச்சி
இப்போ கேள்விக் கேட்டா வாழ்வே போச்சி

நிமிர்ந்து நிற்கும் தஞ்சை கோயில்
வெறும் கல்லாய் போன மாயமென்ன
கல்வெட்டு மீது பொறித்த தமிழ்
வெறும் சொல்லாய் போன மாயமென்ன

கண்ட கனவெல்லாம் காணாமல் போக
நாம் தாழ்த்தப்பட்டோர் அல்ல
குமரிகண்டமும் தமிழ் ஆண்ட
வாழ்த்தப்பட்டோர் அன்றே

கரையின் வலைவுக்கு தலைசாய்த்த நதிபோல
தமிழர் வரலாறு பாதை செதுக்கி தந்துள்ளது
வீழ்ந்துகிடப்பது நிரந்தரம் அல்ல என்ற
வேலு நாச்சியார் கதையும் நமக்குண்டு

போட்டது போட்டபடி கிடக்கு
மீண்டும் போருக்கு புறப்படு
சங்கம் காத்த தமிழர்கள் நாம்
சமுதாயத்தை கட்டி எழுப்புவோம்

- நம்பிக்கையுடன் மீண்டும் -
!!~ இரா. தமிழரசு ~!!